Department of Tamil
தமிழ்த்துறை
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தொடங்கிய 1963 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் தமிழ்த்துறை நீண்ட நெடிய பாரம்பரியத்தையுடைய சிறப்புடைய துறை. சந்திரகாந்தம் தமிழ்மன்றம், தொல்காப்பியர் தமிழாய்வுமையம், எனப்பல அமைப்புகளின் வழியாக மாணவியரின் திறனை மேம்படுத்தி வரும் தமிழ்த்துறை, ‘ஊடகவியல் வேலைவாய்ப்புக் கல்வி’யையும் வழங்கித் திறம்படச் செயலாற்றி வருகின்றது. ஜூலை 2025 முதல் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் 16 நெறியாளர்கள் மற்றும் 20 முனைவர் பட்ட ஆய்வாளர்களைக் கொண்ட ஆய்வுத்துறையாப் பரிணமித்துத் தமிழ்த்துறையின் இலக்கினையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலை நோக்குப்பார்வை
நீண்ட நெடுங்காலமாக பகுதி - I, IV, ஊடகவியல் ஆகியவற்றின் வழியாகத் திறம்பட மொழியைக் கற்பித்துவரும் தமிழ்த் துறையானது இனிவரும் நாட்களில் இளங்கலை, முதுகலை என்ற நிலையிலும் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் இலக்கியத் துறையாக மாற்றம்பெறும். மொழி ஆராய்ச்சியில் தேர்ந்த சீரிய சமுதாயச் சிந்தனையுள்ள மாணவியரை உருவாக்கும் முத்தமிழ்த் துறையாக மிளிரும். மாணவியரின் படைப்பாக ஆண்டுதோறும் தமிழ்ச் சாரல் இதழ் வெளிவரும் நிலையில் இனிவரும் நாட்களில் தமிழ்த்துறை வெளியீடாகப் பன்னாட்டு ஆய்விதழும் கிருஷ்ணம்மாள் செய்தித்தாளும் வெளிவரும்.
துறையின் நோக்கம்
தமிழ்த்துறையானது சமுதாயத்தின் நலன் நாடும் மாணவியரை உருவாக்குதல், மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தல் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுகிறது. சமுதாயத்தில் நல்மனிதராய் வாழ்வதற்குத் தேவையான விழுமியங்களையும் தலைமைப் பண்பையும் நாட்டுப்பற்றையும் இலக்கியங்கள் வழியாக மாணவியருக்குக் கற்பிக்கும் பணியைத் தமிழ்த்துறைமேற்கொண்டிருக்கிறது. ஆகச் சிறந்த ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்த்துறை செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறது.
Tamil (Aided)
- Dr. R. Manimegalai, Associate Professor & HoD
- Dr. N. Gayathri, Associate Professor
- Dr. M. Renuka, Associate Professor
- Dr. R. Sujatha, Associate Professor
- Dr. R. Jothimani, Associate Professor
- Dr. V. Dhanabagyalakshmi, Assistant Professor
Tamil (SF)
- Dr. G. Suganya, Assistant Professor & Head(i/c)
- Dr. A. Akilandeswari, Assistant Professor
- Dr. D. Savitha, Assistant Professor
- Dr. J. Kavitha, Assistant Professor
- Dr. N. Pradeepa, Assistant Professor
- Dr. S. Srijayanthi, Assistant Professor
- Dr. P. Manimegalai, Assistant Professor
- Dr. S. Prema, Assistant Professor
- Dr. P. Kavitha, Assistant Professor
- Mrs. N. Kumutha, Assistant Professor
- Dr R. Malini, Assistant Professor
- Dr. V. Mallika, Assistant Professor
- Dr M. Anbarasi, Assistant Professor
- Dr. R. Aruna, Assistant Professor
- Dr. K. DHANALAKSHMI, Assistant Professor
- Dr. R. Nithyalakshmi, Assistant Professor
- Dr C. DHEEBA, Assistant Professor
