தமிழ்த்துறை
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தொடங்கிய 1963 ஆம் ஆண்டிலி ருந்து செயல்பட்டு வரும் தமிழ்த்துறை நீண்ட நெடிய பாரம்பரியத்தையுடைய சிறப்புடைய துறை. சந்திரகாந்தம் தமிழ் மன்றம், தொல்காப்பியர் ஆய்வுமையம், எனப்பல அமைப்புகளின் வழியாக மாணவியரின் திறனை மேம்படுத்தி வரும் தமிழ்த்துறை , ‘ஊடகவியல் வேலைவாய்ப் புக் கல்வி’யையும் வழங்கி திறம்படச் செயலாற்றி வருகின்றது.
தொலை நோக்குப்பார்வை
நீண்ட நெடுங்காலமாக பகுதி - I, IV , ஊடகவியல் ஆகியவற்றின் வழியாக திறம்பட மொழியைக்கற்பித்துவரும் தமிழ்த்துறையானது இனிவரும் நாட்களில் இளங்கலை, முதுகலை என்ற நிலையில் தமிழ் இலக்கியம் கற்பிப்பதுடன் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்களை வழிநடத்தக்கூடிய ஆய்வுத்துறையாகப் பரிணமிக்கும். மொழி ஆராய்ச்சியில் தேர்ந்த சீரிய சமுதாயச்சிந்தனையுள்ள மாணவியரை உருவாக்கும் முத்தமிழ்த் துறையாக மிளிரும்.
துறையின் நோக்கம்
தமிழ்த்துறையானது சமுதாயத்தின் நலன் நாடும் மாணவியரை உருவாக்குதல், மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தல் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுகிறது. சமுதாயத்தில் நல்மனிதராய் வாழ்வதற்குத் தேவையான விழுமியங்களையும் தலைமைப் பண்பையும் நாட்டுப்பற்றையும் இலக்கியங்கள் வழியாக மாணவியருக்குக் கற்பிக்கும் பணியைத்தமிழ்த்துறை மேற் கொண்டிருக்கிறது.